Mnadu News

பிசானத்தூர் திரௌபதி அம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள பிசானத்தூரில் சித்திரை மாதத் திருவிழாவை ஒட்டி திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. விழாவினையொட்டி திரௌபதி அம்மன் பாஞ்சாலி, அர்ச்சுணன், பீமன் ,நகுலன், ஜகாதேவன், ஆட்டு கிடா, அய்மன்னன், அரவன் ஆகிய தெய்வங்களுக்கும் நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா சிறப்பான முறையில் நடைப்பெற்றது.22 நாட்கள் நடைபெற்ற மகாபாரதகதை திருவிழாவில் தீ குன்டங்கள் ஏற்றி தீ மிதி திருவிழா மிக விமர்சயாக நடைபெற்றது.600 பேருக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு தீ மிதித்து நேத்திகடன் செலுத்தினர்.இத்திருவிழாவை காண பல்வேறு ஊரில் இருந்து லாரி ஆட்டோ வேன் மூலமாக வந்து 1500 க்கு மேற்பட்ட பக்த கோடிகழும் பொதுமக்களும் களந்து கொன்டனர்.

Share this post with your friends