சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக பொதுச் செயலாளராக செங்கோட்டையன் நியமிக்கக்கோரி கழக நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் ஒற்றை தலைமை தேவை என ராஜன் செல்லப்பா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் அடங்கிய கூட்டம் இன்று சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையனை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க கோரி சுவரோட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்டக் கழகப் பிரதிநிதி சிதம்பரம் கூறுகையில்,கல்வித் துறையில் சிறப்பாக சேவையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன் நீண்ட நாட்களாக கட்சிப் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனக்கு உரிய பதவிகளை சிறப்பாக செயல்பட்டதால் கட்சி ஒற்றுமை கருதி MGR தொண்டர்கள் கே ஏ செங்கோட்டையன் பொதுச் செயலாளராக நியமிக்க கோரி போஸ்டர் ஒட்டியதாக தெரிவித்தார்.