குஜராத் மாநிலத்தில் வாயு புயலின் தாக்கத்தால் காண மழை பெய்து வருவதால் அங்கு வசிக்கும் மக்கள் வெளியில் வர முடியாமல் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் .
இந்நிலையில் வாயு புயல் அதி தீவிர புயலாக மாறி நாளை குஜராத் கடலோர பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 145 கிமீ முதல் 170 கிமீ வரை வீசக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது .