புனேவில் பிரபல பர்கர் கடையில் பர்கர் சாப்பிட்டவர், அதனுள் இருந்த கண்ணாடித்துண்டுகள் தொண்டைக்குள் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் பூனேவில் சஜித் பதான் என்ற ஆட்டோ ஓட்டுநர், கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன், பிரபல பர்கர் கிங் கடைக்கு உணவருந்த சென்றுள்ளார். அங்கு அனைவரும் சாப்பிட தொடங்கிய போது, சஜித் பதானின் தொண்டைக்குள் ஏதோ சிக்கவே வலியால் துடித்த அவரது வாயிலிருது ரத்தம் கசிந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன சக நண்பர்கள் அவர் சாப்பிட்ட பர்கரை ஆராய்ந்த போது அதில் சில உடைந்த கண்ணாடித்துண்டுகள் இருந்துள்ளன. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறியுள்ளார்.
இதனிடையே அவர் பர்கர் கிங் கடையின் மீது அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரபல பர்கர் கடையில் வாங்கிய பர்கரில் கண்ணாடித்துண்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.