தற்பொழுது தண்ணீர் தட்டுப்பாடு வழக்கத்தை காட்டிலும் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தரவேண்டிய முறையான தண்ணீரை வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது .
இந்நிலையில் ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை.
டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது .மேலும் கர்நாடக அரசு அணையையே கட்ட மறுப்பு தெரிவிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.