இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தனது அடுத்த படத்தினை இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
தனுசு ராசி நேயர்களே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், இரண்டு நாயகிகளில் ஒரு நாயகியாக பாலிவுட்டின் ரியா சக்கரவர்த்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று படக்குழுவினர்களால் கூறப்பட்டுள்ளது.