Mnadu News

மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை-இந்திய வானிலை ஆய்வு மையம்

மும்பையின் புறநகர் பகுதிகளிலும் அடுத்த 2 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

குறிப்பாக மும்பையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது. சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி, வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பஸ், ரெயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளனர் .

Share this post with your friends