நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு முன்னேறுமா என தேசமே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்திய அணி 7ஆவது முறையாக உலகக்கோப்பை அரையிறுதியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தகுந்தது.
முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதில் சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுளார் .இந்நிலையில் ,உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என நடிகையும்,பாஜக எம்.பியுமான ஹேமமாலினி தெரிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில் உலக கோப்பையில் போட்டியிடும் இந்திய அணிக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார் .மேலும் இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் திறம்பட செயல்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.