மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் திமுக எம்.பி கனிமொழி அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கனிமொழி, கலைஞர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
தேர்தலில் வாய்ப்பளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கனிமொழி நன்றி தெரிவித்தார். வெற்றியை கலைஞர் பாதத்தில் அர்பணிப்பதாக எம்.பி கனிமொழி பேட்டி அளித்தார். தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த தூத்துக்குடி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அவர்களின் நன்மைக்காக பாடுபடுவேன் என்று கனிமொழி கூறினார். தமிழகத்தில் திராவிட இயக்க கொள்கைகள் உயிர்ப்புடன் இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்பது கனிமொழி கருத்தாகும்.