இந்து தீவிரவாதி கோட்சே என்ற எனது கருத்தில் எந்தத் தவறும் இல்லாததால் ஒருபோதும் தனது கருத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என கமல்ஹாசன் தனது சர்ச்சைக்கு தகுந்த பதிலடிக் கொடுத்துள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன் இதே போன்ற கருத்தை சென்னை மெரினாவிலும் தெரிவித்திருந்தேன் அப்போது எந்தவிதமான சிக்கலையும் சந்திக்காத போது தேர்தல் சமயத்தில் சந்திக்கிறேன். இது உருவான சர்ச்சை இல்லை. அரசியல் கட்சிகளால் உருவாக்கப்பட்ட சர்ச்சை என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்காக ஒரு போதும் பயப்படபோவதில்லை. அப்படி ஒரு வேளை கைது செய்தால் அரசியல் பதட்டத்தை சந்திக்க நேரிடும் என கமல்ஹாசன் சவால் தொடுக்கும் தொணியில் தெரிவித்துள்ளார்.