தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி, 10 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.இதற்காக, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, காணொலி காட்சி மூலம், 10 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுடன் சுமார் ஒன்றரை மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.