Mnadu News

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனி இடத்தை நிரப்புவதற்கு யாரும் இல்லை – ரவி சாஸ்திரி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், தோனிக்கு நிகரான ஒரு வீரர் கிடையாது என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்து கூறியுள்ளார்.விராட் ஹோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து செல்கிறது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார்.அவருக்கு நிகராக வேறு ஒருவர் வீரர் இல்லை என குறிப்பிட்ட ரவி சாஸ்திரி, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரராக திகழ்வார் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Share this post with your friends