அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரின் ஆட்சியின் கீழ் உள்ள , இந்தோ-பசிபிக் மண்டலத்திற்கான செயல்திட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்தார்.
மைக் பாம்பியோவின் ஆசிய பயணம் வரும் ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்குவதாகவும், முதலில் இந்தியா செல்லும் அவர் பின்னர் இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மார்கன் ஆர்ட்டேகஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு செல்லும் அவர் பின்னர் ஜி-20 உச்சிமாநாடு நடைபெறும் ஜப்பானின் ஒசாகா நகருக்கு பாம்பியோ செல்ல இருப்பதாகவும் மார்கன் ஆர்ட்டேகஸ் கூறியுள்ளார்.