இன்றைய வர்ததக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 168 புள்ளிகள் அதிகரித்து, 39 ஆயிரத்து 784 புள்ளிகளாக நிலைபெற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து 11 ஆயிரத்து 922 புள்ளிகளாக முடிவடைந்தது. வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 350 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்த நிலையில், பவர்கிரிட், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ், எஸ் பேங்க், எல்&டி, இன்போசிஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 சதவீதம் வரை அதிகரித்திருந்தன.