ஸ்பெயினில் உள்ள மான்டி நேமே என்ற ஏரி பார்ப்பதற்கு கடல் போல நீல நிறத்துடன் அழகாகக் காட்சியளிக்கிறது. பல்வேறு புகைப்படங்கள் மூலம் இந்த ஏரி இன்ஸ்டாகிராமில் புகழ்பெற்றது.
பலரும் இந்த ஏரி முன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் . ஒரு சிலர் ஏரியில் நீந்துவது போன்றும் படம் எடுத்துவருகினற்னர் . ஆனால் அது டங்ஸ்டன் தாது சுரங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுவதால் நச்சுக் குட்டையாகப் பார்க்கப்படுகிறது.
லைக்குகளைப் பெற அந்த நச்சுக்குட்டையில் நீந்தியவர்கள் தோல் அரிப்பு, வாந்தி பேதி உள்ளிட்ட உபாதைளுக்கு ஆளாகியுள்ளனர். எனவே அந்த ஏரி நீரில் இறங்குவதைத் தவிர்க்குமாறு உள்ளூர் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .