சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்திற்கு வருவதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்திருந்தது. தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு சிறிது காலமாக உடல் நிலை சரியில்லாமல் இருத்தது. இந்நிலையில் ,தற்பொழுது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூ.5.52 கோடி விஜயகாந்த் பெயரில் கடன் பாக்கி உள்ளது.இந்த கடன் பாக்கிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வீடு ஜூலை 26ல் ஏலத்துக்கு வருகிறது.
மேலும் அவருக்கு சொந்தமான மதுராந்தகம் அருகே மாமண்டூரில் உள்ள விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும் ஏலம் விடப்படுவதாகவும் தகவல் வெளியாகியது .இந்நிலையில் , பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில் ,தமிழகத்திலுள்ள நிறைய பொறியியல் கல்லூரிகள் கடனில்தான் உள்ளதுஎங்கள் பொறியியல் கல்லூரியின் வளர்ச்சிக்காக வாங்கிய கடன் தான் அது என்றும் , சட்டப்பூர்வமாக இந்த பிரச்னையை சந்தித்து மீண்டும் வருவோம் எனவும் கூறினார்.