பேஸ்புக் நிறுவனத்தை நாம் கைகழுவவேண்டிய நேரம் வந்துவிட்டது என பேஸ்புக்கின் இணை நிறுவனராக இருந்த க்றிஸ் ஹூக்ஸ் சொல்லியிருக்கிறார். நியூ யார்க் டைம்ஸ் இதழுக்காக அவர் எழுதிய கட்டுரையொன்றில் இதைக் குறிப்பிட்டுள்ளார் ஹூக்ஸ்.
இதில், ஹூக்ஸ் மூன்றே ஆண்டுகளில், 2007-ம் ஆண்டு ஃபேஸ்புக்கை விட்டு விலகிவிட்டார். அந்த 3 ஆண்டு உழைப்புக்காக அவருக்குக் கிடைத்தது, கிட்டத்தட்ட 3,500 கோடி ரூபாய் கிடைத்தது . கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பேஸ்புக்குக்காக எந்த வேலையையும் செய்யவில்லை. இந்த நிலையில், அவர் நியூ யார்க் டைம்ஸ் இதழில் எழுதிய கட்டுரை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.எந்தத் தொழிலிலும் மோனோபாலிகள் உருவாவதை அமெரிக்க பாரம்பரியம் ஏற்றதில்லை. மார்க்கும் ஃபேஸ்புக்கும் அப்படி மாறியிருக்கிறார்கள்” என்கிறார் ஹூக்ஸ்.மார்க் நல்லவர்தானென்றும், ஆனால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகத் தனி நபர் பாதுகாப்பை அவர் தியாகம் செய்ததுதான் தன்னைக் கோபப்படுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார், ஹூக்ஸ்.