ஆந்திராவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலுங்கு தேச கட்சி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் ஆளும் சந்திர பாபு நாயுடு ஆட்சியை களைத்து ஆட்சியை கைப்பற்றினார் . ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்கும் விழாவிற்கு தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்ற நிலையில், ஜெகன் மோகன் ரெட்டி நாளை மதியம் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொள்வதற்காக ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவை தொலைபேசியில் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சந்திரபாபு நாயுடுவும் நாளைய விழாவில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு ஏற்கெனவே நேரில் சென்று ஜெகன் மோகன் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More