சென்னை சாந்தோம் சர்ச் அருகே 30 லட்சம் மதிப்பிலான புதிய உடற்பயிச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது .அதை திறந்து வைத்து உடற்பயிற்சி செய்து பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் சந்தித்தார்.பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் அவர்களிடம் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டம் குறித்து அவர் கேட்டபொழுது, அதிமுகவில் பிளவு என்பது வதந்தி என்று கூறியுள்ளார்.
தேர்தலை தொடர்ந்து நடைபெற்ற சாதாரண கூட்டம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில் அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது அவசியமற்ற சர்ச்சை.எதிரிகளின் எண்ணத்தில் மண் விழும் வகையில் நேற்றைய கூட்டம் எவ்வித பிரச்னையுமின்றி நடைபெற்றது என ஜெயக்குமார் கூறியுள்ளார் .
பின்னர் முதல்வர் எடப்பாடி மற்றும் ஆளுநர் சந்திப்பை குறித்து அவர் கூறுகையில் ,மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் ஜெயக்குமார் பதிலளித்தார்.