இந்தோனிஷியாவில் சில தினங்களுக்கு முன் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், ஜோகோ விடோடா 55.5 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அதிபரானார் .
இவரை எதிர்த்து போட்டியிட்ட ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஜெனரல் பிராபோ சுபியாந்தோ 44.5 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், தேர்தலில் சூழ்ச்சி செய்து ஜோகோ வெற்றிப்பெற்றதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், பிராபோவோவின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து , தலைநகர் ஜகர்த்தா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.