கர்நாடக சட்டப்பேரவையில் தொடர்ந்து பேசிய முதல்வர் என் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும் அரசியல் சாசனத்தை காக்கவும் ,சபாநாயகரின் உரிமையை பாதுகாக்க போராடுவதாகவும் கூறினார் .
மேலும் பேசிய அவர் ஆட்சியை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும் என எதிர்க்கட்சியினர் திட்டம்மிட்டு செயல்படுவதாகவும் அவர் கூறினார் .
இந்நிலையில் பாஜகவை பற்றி பேசிய முதலவர் குமாரசாமி தற்போதைய நிகழ்வுகளை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள் என்று கூறினார் .பாஜக ஆட்சியில் நடந்த சில ஊழல்களில் பலர் தப்பிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார் .
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் பாஜக குறித்த உரையால் திடீரென்று பாஜக எம் எல் ஏக்கள் இடையே சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டு வருகிறது .