22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவு தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதனையடுத்து முக்கிய பிரமுகர்களை தனது கட்சியில் இணைக்கும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, ரஜினி கட்சியில் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய பிரமுகர்களை இணைக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.