வேலூர் மாவட்டம் கோபாலபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கெங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழா கடந்த 15ஆம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்றாம் நாள் விழாவில் பூ பல்லக்கில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. பூ பல்லக்கு குடியாத்தம் காட்பாடி சாலையில் வந்த போது கூட்டத்தோடு கலந்து 3 மர்ம நபர்கள் கோயில் நிர்வாகி உறவினர் கீர்த்தி என்பவரை கத்தியால் குத்திவிட்டு அங்கி தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த கீர்த்தி வேலூர் தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி குடியாத்தம் காட்பாடி சாலையில் பூ பல்லக்கை நிறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டி.எஸ்.பி. சரவணன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பூ பல்லக்கு ஊர்வலத்தில் நடந்த கத்திகுத்து சம்பவத்தால் கோயில் திருவிழா களையிழந்தது. விழாவில் நடந்த அசம்பாவிதத்தால் ஏதேனும் சாமி குத்தமாகிவிடுமோ என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More