Mnadu News

கொடைக்கானலில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

இந்தியாவின் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விடுமுறையை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று தொடங்கியது.வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ரிப்பன் வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். பல லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு, கிளி, நந்தி, ஒட்டகச்சிவிங்கி, வெள்ளை மயில், குதிரை உடல் கொண்ட நார்னியா உருவம், மோட்டு பட்லு கார்ட்டூன் கதாபாத்திரங்களின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. உற்சாகத்துடன் பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், விருப்பமான இடங்களில் நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மூன்று நாட்க‌ள் ந‌டைபெறும் ம‌ல‌ர் க‌ண்காட்சி, நாளை ம‌றுநாள் ப‌ரிச‌ளிப்பு விழாவுட‌ன் நிறைவு பெறுகிற‌து. தொட‌ர்ந்து ப‌ல்வேறு க‌லைநிக‌ழ்ச்சிக‌ள்,போட்டிக‌ள் 10 நாட்க‌ளுக்கு ந‌டைபெற‌ உள்ள‌து.

Share this post with your friends