தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மக்களின் பல்வேறு போராட்டத்திற்கு இடையில் மூடப்பட்டது .ஆனால் ஆலையை மீண்டும் திறக்க கோரி வேதாந்த நிறுவனம் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்தது.
இந்நிலையில் மின் துறை அமைச்சர் தங்கமணி ஸ்டெர்லைட் ஆலை குறித்து தெரிவிக்கையில்,ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டப்பதால், காப்பர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தாம்பரத்தில் மின்மாற்றிகள் அமைப்பது தொடர்பான அந்தத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் குடியிருப்புகள் எதிரில் மின்மாற்றிகள் அமைக்க பொதுமக்கள் சம்மதிப்பது இல்லை என்றும், அதனால் பல இடங்களில் மின் மாற்றிகள் அமைப்பதில் சிக்கல் ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.