Mnadu News

மு.க.ஸ்டாலின் ஆளுமை மிக்க தலைவர்… திமுகவில் இணைந்தபின் தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தங்கதமிழ்செல்வன் இணைந்தார் .டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

தங்கதமிழ்செல்வனை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக தினகரன் ஏற்கனவே கூறியிருந்தார்.இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்தங்கதமிழ்செல்வன் இணைந்தார்.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த தங்கதமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .அதிமுக இரண்டாக பிரிந்தது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக தங்கதமிழ்செல்வன் இருந்து வந்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் அமமுக படு தோல்வியை சந்தித்த நிலையில் தினகரன் – தங்கதமிழ்செல்வன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது .இதற்கு முன்னதாக கரூர் செந்தில்பாலாஜியை தொடர்ந்து தங்கதமிழ்செல்வனும் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார், தங்கதமிழ்செல்வன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார் .

அப்பொழுது அவர் தெரிவிக்கையில் ,மு.க.ஸ்டாலின் தளபதி அவர்கள் தான் நல்ல தலைமை கொடுக்க முடியும் என தேர்தல் முடிவு அறிவுறுத்தியுள்ளது என்று கூறினார் . அதனால்தான் திமுகவில் இணைந்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார் .

 

Share this post with your friends