தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சத்யமூர்த்திபவனில் சந்தித்தார். அப்போது பேசிய அவர் மக்களுடைய நாடியை பார்த்து சொல்கிறேன். மத்தியில் பிரதமர் ஆகும் வாய்ப்பு மோடிக்கு இல்லை என்று பேசியுள்ளார். மேலும் பேசிய அவர் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி அணியே வெற்றி பெரும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் ஒரு தொலைக்காட்சிக்கும் மற்றொரு தொலைக்காட்சிக்கும் ஏறக்குறைய 100 தொகுதிகள் வித்தியாசம் இருக்கிறது. இதிலிருந்துக் கருத்துக் கணிப்புகளின் உண்மை நிலையை தெரிந்துகொள்ளலாம் என்றார். மேலும் 23ம் தேதி நடைபெற இருக்கிற எதிர்கட்சிகளின் கூட்டத்தை சீர்குலைக்கவே ஆளும் கட்சிகள் இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் திட்டமிட்டே வெளியிடப்படுவதாகவும் கூறியுள்ளார்.