கடந்த ஆண்டின் பதிவின்படி இந்நேரம் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் பருவமழை தொடங்கி இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டில் தற்போது வரை 10 முதல் 15 பகுதிகளில் மட்டுமே பருவமழை தொடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தொடங்காமல் இருக்க வாயு புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது.இதனால் பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழையானது தமிழகத்தில் தீவிரமடைய 3 முதல் 4 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ஆம் தேதிக்குள் தென்னிந்தியா முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .