கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின்… அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடைபெற்ற இம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தொழிலாளர்களின் பதிவுக்கு பரிந்துரை கடிதம் வழங்குதல், தொழிலாளர் சங்க ஆண்டு சமர்பித்தல் மேலும் சங்க உறுப்பினர் சேர்க்கை, சங்கம் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் சிதம்பரம் கோட்ட நெறியாளர் பாபு, மாநில செயற்குழு உறுப்பினர் எழிலரசன், ஒன்றிய தலைவர் வேல்முருகன் , உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.