கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த கொரக்காவாடி ஊராட்சிக்கு உட்பட்ட கொ.குடிகாடு கிராமத்தில் 2500 க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட வந்தநிலையில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் தட்டுப்பாட்டால் சரியான முறையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகம் கடந்த நான்கு நாட்களாக முற்றிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது .
இதன்காரணத்தால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் காலிகுடங்களை குடிநீர் தொட்டி முன்பு வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து வந்த ராமநத்தம் போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.