ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகிலன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.எழும்பூர் நீதிமன்றத்திற்கு அவரை போலீசார் அழைத்து சென்றனர்.பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகிலனை சில தினங்களுக்கு முன்னர், மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தியபோது நெஞ்சு வலி என கூறியதால் அவருக்கு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதியளித்து சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அவருக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அனைத்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பின்பு காலை 12 மணியளவில் முகிலன் பொது வார்டிற்கு மாற்றப்பட்டார். அவருக்கு உடல் நிலை நலமாக உள்ளது எனக்கூறி மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்தனர். டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முகிலன் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.