Mnadu News

சென்னனை அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி

நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் காய்ச்சல் காரணமாக தோனி விளையாடவில்லை.

முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேட்பன் ரோஹித் சர்மா அதிகமாக 67 ரன்களை எடுத்தார் .

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே சொதப்பினர். சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். கடைசியில் சென்னை அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 38 ரன்கள் எடுத்தார்.

இதனால் மும்பை அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்கு எதிராக விளையாடிய 2 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது.

Share this post with your friends