திமுக கொண்டுவந்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தேவையற்றது என்று தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் என்று கூறியுள்ளது அவர் எடுத்த முடிவு என முத்தரசன் பேட்டி அளித்துள்ளார் .பின்னர் அவர் தெரிவிக்கையில் ,தீர்மானத்தைக் கொண்டு வந்தது திமுக அதே போன்று தற்போது தேவையற்றது என்று கூறியுள்ளார்,ஸ்டாலின் எடுத்த முடிவுக்குப் பின்னால் பின் விளைவுகள் தமிழக அரசிற்கு ஏதோ ஒன்று விரைவில் நடக்கும் என்று நான் நம்புகிறேன், உதயநிதி ஸ்டாலின் கே என் நேருவோ கூறிய கருத்து அவர்கள் கட்சி அதிக இடத்தில் நிற்க வேண்டும் என்ற ஆசையில்தான் ஆனால் இதற்கான முடிவை எடுக்க வேண்டியது திமுகவின் தலைவர் ஸ்டாலின் தான் கூட்டணி குறித்து ஸ்டாலின் எடுக்கும் முடிவே இறுதியானது, இதுநாள் வரைதிமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை, பாஜக கட்சி ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி சர்வாதிகாரத்தில் நம்பிக்கை உடைய கட்சி, நடைபெறக்கூடிய சட்டமன்றத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் 8 வழி சாலை நீட் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசு எடுத்துள்ள முடிவு என்ன அதற்கான தீர்வு என்ன என்பதை முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார் .

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More