வாயு புயலானது அதிதீவிர புயலாக மாறி குஜராத்தில் இன்று பிற்பகல் கரையை கடக்க இருக்கிறது இதற்கான முன் எச்ரரிகை ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .
குஜராத்தில் புயல் வீச கூடிய வட்டாரங்களில் இருந்த 10000 சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்
குஜராத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் பாதுகாப்பாக மாற்று இடங்களுக்கு செல்லப்பட்டனர் .
குஜராத் கடலோர நகரங்களை சேர்ந்த 2 .15 லட்சம் பேர் புயல் பாதிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
இந்நிலையில் தற்போது வாயு புயல் குஜராத் மாநிலத்தை தாக்காது என்றும் பலத்த காற்றுடன் கன மழை மட்டுமே பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .
முன் எச்ரரிகை ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக உள்ள நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தரில் தேசிய பேரிடர் மீட்பு குழு தற்போது முகாமிட்டுள்ளது