Mnadu News

படம்னா என்னன்னு தெரியுமான்னு கேக்க வச்சிருக்கும் நட்புனா என்னன்னு தெரியுமா? திரைப்படம்

அறிமுக இயக்குனர் சிவா அரவிந்த் இயக்கத்தில் கவின், அருண்ராஜா காமராஜா, ரம்யா நம்பீசன், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், இளவரசு  நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான்  நட்புனா என்னான்னு தெரியுமா.

ஹீரோ இன்ரொடக்சன்:

அரசு மருத்துவமனையில்  ஒரே நேரத்தில் மூன்று பெண்கள்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்தடுத்து பிறந்து மூன்று குழந்தைகள் நண்பர்களாகிறார்கள். அதில் ஒருவர் தான் ஹீரோ. இப்படித் தான் நட்புனா என்னானு தெரியுமா கதைக்களம் ஆரம்பமாகிறது.

ஹீரோயின் இன்ரொடக்சன்:

ஹீரோ இன்ரொடக்சன் தான் இந்த அளவுக்கு படுமோசமாக இருக்கிறது  என்றால் ஹீரோயின் இன்ரொடக்சன் மேலுமொரு படி மேலே சென்றிருக்கிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலிக்கண்ணீர் வடித்து காப்பி அடிப்பதற்காக பேப்பரை வாங்கி ஹீரோவை ஹீரோயின் ஏமாற்றி விடுகிறார்.

காமெடி:

மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான் என்ற கூட்டணியை சரியான விகிதத்தில் பயன்படுத்தவில்லை. ஆனால் அருண்ராஜா காமராஜா வரும் ஃப்ரேம்கள் ஆங்காங்கே சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் சொதப்பிய  ராஜூ இரண்டாம் பாதியில் தன்னுடைய பவ்வியமான வசனங்களால் சிரிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் பெஸ்ட்:

அருண் ராஜா காமராஜா, ராஜூ இவர்களின் அப்பாவித்தனமான வசனங்கள் மட்டும் தான் படத்தின் பெஸ்ட்

அட்வைஸ்:

பாடல்களை தவிர்த்துவிட்டு திரைக்கதையில் இயக்குனர் கவனம் செலுத்தியிருந்தால் நல்ல நகைச்சுவை திரைப்படம் கிடைத்திருக்கும்

படம் எப்படி இருக்கு:

சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் மூன்று நண்பர்கள் ஒரே பெண்ணின் மீது காதல் கொள்கிறார்கள். மூவரில் யாரை அந்த பெண் காதலித்து மணமுடிக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல முற்பட்டிற்கிறார்.

கவின், அருண்ராஜா, ராஜூ ஆகிய மூவரும் சிறுவயதிலேயே நண்பர்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நீலிக்கண்ணீர் வடித்து காப்பி அடிப்பதற்காக பேப்பரை வாங்கி ஏமாற்றி விடுகிறார் இதனால் தேர்வில் தோல்வியடைகிறார் கவின். அன்றிலிருந்து பெண்களை நம்பக்கூடாது என்ற சிந்தனைக்கு வருகிறார் படத்தின் ஹீரோ.

பலவருடங்களாக விஐபிகளாக இருக்கும் மூன்று பேரும் கல்யாண ஏற்பாட்டாளர்களாக அதே பகுதியைச் சேர்ந்த இளவரசுவுக்கு எதிராக தங்களது தொழிலை தொடங்குகிறார்கள். தொழில் சுமூகமாக சென்று கொண்டிருக்கும்போது ரம்யா நம்பீசனை ராஜூ சந்தித்து காதலில் விழுகிறார்.

ராஜூ தனது காதலியை அறிமுகப்படுத்த கவினையும் அருண்ராஜா காமராஜாவையும் அழைத்துச் செல்கிறார். ரம்யா நம்பீசனைப் பார்த்ததும் கவின் காதல் வயப்படுவதோடு நில்லாமல் அருண்ராஜா காமராஜாவுக்கும் காதல் ஆசையை தூண்டி விடுகிறார். பாய்ஸ் படப்பாணியில் தங்களது காதல் புரப்போசல்களை அரங்கேற்றுகிறார்கள்.

மூவரில் யாரை ரம்யா நம்பீசன் ஓகே சொல்கிறார். இந்தப் புனிதக் காதல் பயணத்தில் விஷம் குடித்து உயிரைத் தியாகம் செய்தார்களா? இறுதியில் யாருடன் கல்யாணம் நடக்கிறது என்பது தான் மீதிக் கதை.

சின்னத்திரை நெடுந்தொடரைப் போல் தொடரும் இந்த திரைப்படம் இளவரசு, ராஜூ, அருண்ராஜா காமராஜா, அவ்வப்போது வரும் மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன் வரும் காட்சிகளால் ரசிக்க வைத்தாலும் தொடர்ச்சியான திரைக்கதை இல்லாததால் முகம் சுளிக்க வைக்கிறது,

சற்றே திரைக்கதை சுவாரஸ்யமாக நகரும் போது சம்மந்தமில்லாமல் இடையிடையே வரும் பாடல்கள்  குறுக்கிட்டு  பார்வையாளர்களை அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது.

இது நட்புக்கான திரைபடமா? நட்புக்கும் காதலுக்கும் இடையேயான திரைப்படமா? துரோகத்துக்கான திரைப்படமா ? என ஒவ்வொரு பார்ட்டிலும் ஒவ்வொரு விதமாக யோசிக்க வைத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு பள்ளி ஆண்டு விழாவை பார்த்தது போன்ற அனுபவத்தை இயக்குனர் தந்திருக்கிறார்.

Share this post with your friends