தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் ,ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகல் என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என்றும் நீதிபதி சார்பில் விளக்கம் அளித்துள்ளது.மேலும் ,வேறு அமர்வுக்கு மாற்றுவது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் ,ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விலகல் அளித்துள்ளதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார் .மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,வேதாந்தா குழும வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே விசாரித்துள்ளதால் தற்போது விசாரிக்க விரும்பவில்லை என நீதிபதி சசிதரன் தரப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றக்கோரி வேதாந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது . வழக்கு விசாரணையிலிருந்து சசிதரன் விலகியுள்ளதால் புதிய அமர்வு அறிவிப்பு .ஸ்டெர்லைட் வழக்கை விசாரிக்க நீதிபதி சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய புதிய அமர்வாக அறிவிக்கப்பட்டுள்ளார்.