பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி, உற்பத்தி மற்றும் பேக்கேஜிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தும் நிறுவனங்கள் அவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
நிறுவனங்களோ அல்லது இடைத்தரகு நிறுவனங்கள் மூலமோ அந்த பிளாஸ்டிக்கை சேகரித்து மறு சுழற்சி செய்ய வேண்டும். இதை மேற்கொள்ளத் தவறியதாகக் கூறி அமேசான், ஃபிளிப்கார்ட், டனோனோ ஃபுட்ஸ் அண்ட் பிவரேஜஸ், பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடட் உள்ளிட்ட 52 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.