மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்ப, மக்கள் தயாராகிவிட்டதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். மேலும் அவர் கூறுகையில் , நாடாளுமன்ற தேர்தல் மூலம், பாஜக ஆட்சியையும், இடைத்தேர்தல் மூலம், அதிமுக ஆட்சியையும், வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராவிட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பு படித்த ஒரு கோடி பேருக்கு சாலை பணியாளர் வேலை வழங்கப்படும் என்றும், கேஸ் சிலிண்டர், கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் என்றும், மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.திமுக ஆட்சிக்கு வந்தவுடன், 5 சவரன் வரையிலான நகைக்கடன், மற்றும் உயர் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், மு.க.ஸ்டாலின் உறுதிபடக் கூறினார்.