திருவாரூர் சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடங்கிவைத்தார்.
சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை தியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஆளுநர் கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். பிரபல இசைக் கலைஞர்கள் உட்பட நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் பங்கேற்று பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடினர்.