மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாமக இடம்பெற்றுள்ள அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியை தக்க வைக்கும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், ஸ்டாலினின் கனவு நினைவாகாது என்றும் கடுமையாக சாடினார். ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக அதனால் தான் வீடு வீடாக பிரச்சாரம் செய்கிறார் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.