சீனா நாட்டின் கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்கு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தொடர்மழையின் காரணமாக அந்த பகுதியில் வாழும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர் வெள்ளத்தால் தொடர்புகளற்று தனித்து விடப்பட்டுள்ளனர்.
ஜியாங்சி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ள நிலையில், 10 ஆயிரத்து 800 ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன .
வெள்ளத்தில் சிக்கிய மக்களையும் அந்த பகுதியில் இருக்கும் மக்களையும் மீட்க மீட்பு பணிகளை அண்ணனது அரசு முடுக்கிவிட்டுள்ளது . இந்நிலையில் 14 லட்சம் பொதுமக்கள் வெள்ளத்தால் உடமைகளை இழந்து தவித்து வருவதோடு, பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.