சேலம் மாவட்டம் கருமந்துறை மலைப்பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஐஜி பெரியய்யா உத்தரவின் பெயரில் இன்று காலை கருமந்துறை மலைப்பகுதிகளில் உள்ள 20 கிராமங்களில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கானீகேர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுநூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர், வனத் துறையினர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மலை கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று என்ன தொழில் செய்கிறார்கள் மற்றும் எத்தனை நபர்கள் உள்ளனர் என்று அவரிடம் விசாரணை நடத்தினர்.அங்கு நடத்திய அதிரடி விசாரணையில் மலை கிராமங்களில் புதரில் கிடந்த 2 நாட்டு துப்பாக்கி சிக்கியது. அந்த துப்பாக்கிகளை கைப்பற்றி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More