தமிழ் சினிமாவில் இவரின் கதைகளின் மூலம் மக்களின் கவனத்தை ஈா்த்தவா் இயக்குனர் பா.ரஞ்சித் தொடா்ந்து சாதி கொடுமைகளுக்கு எதிராகவும், சமத்துவம் குறித்தும் தொடா்ந்து குரல் கொடுத்து வருபவா். சமீபத்தில், தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினாா். சோழ மன்னா் ராஜராஜ சோழன் காலத்தில் தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலம் அபகரிக்கப்பட்டது. ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் இருண்ட காலம் என்று பேசியிருந்தாா்.இந்நிலையில், ராஜராஜ சோழன் குறித்து அவதூறாக பேசி வரும் இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ,இதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில், திருப்பனந்தாள் காவல்நிலைய போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.