நடிகை ராய் லட்சுமி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய படம் ‘நீயா 2’. இந்த படத்தில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
இந்த படத்தை தொடர்ந்து நடிகை ராய் லட்சுமி ‘சிண்ட்ரெல்லா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் ராய் லட்சுமி 3 வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
‘சிண்ட்ரெல்லா’ கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடித்து வருகிறார். மற்றொரு வேடம் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் .