Mnadu News

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு

நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தார்.இந்நிலையில் வருகிற 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார் . ஜனாதிபதி மாளிகையில் மாலை 7 மணிக்கு நடைபெறும் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசனுக்கும், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்து இன்னும் கமல்ஹாசன் முடிவு எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

Share this post with your friends