கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனியார் பள்ளிகள் கொள்ளை கட்டணத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சமூக ஊடகம் மாநில துணை செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் விசிக மங்கலம்பேட்டை நகர செயலாளர் விடுதலை அம்பேத், நகர துணை செயலாளர் தனகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ரமேஷ் , வழக்கறிஞர் கி.மு,மொ வெங்கடேசன் விசலூர் முகாம் செயலாளர் அழகேசன் விசலூர் முகாம் செயளாலர் , மாவட்ட அமைப்பாளர்கள் சிந்தனைசெல்வன், அப்பு ,சங்கர் , மங்கலம்பேட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விசலூர் முகாம் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பித்தனர்.