Mnadu News

கமலுக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கியது- உயர்நீதிமன்றம்

நான்கு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட மக்கள் நீதிமய்யம் தலைவர், அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள பள்ளபட்டியில் பேசும்போது, காந்தியை கொலை செய்த கோட்சே ஒரு இந்து என்று கூறினார். இந்து என்று பேசியதற்கு கடும் கண்டனம் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்து வந்துள்ள நிலையில், பிரதமர் மோடி வரை விளக்கமளித்தார். இதனிடையே, சர்ச்சையாக பேசிய கமல்ஹாசன் மீதும், கட்சி மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் முதல், உள்ளூர் காவல் நிலையங்கள் வரை புகார்கள் குவிந்தன. இதனை எதிர்கொள்ளும் விதமாக கமல்ஹாசன் சார்பில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, இரண்டு பேர் ஜாமீன் வழங்கவும், 10 ஆயிரம் ரூபாய் ரொக்க ஜாமினும் அளிக்க உத்தரவிட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இது கமல் தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this post with your friends