Mnadu News

நாகையில் 4 வழிச்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீர்காழிக்கு அருகே நடராஜபிள்ளை சாவடி கிராமத்தில் நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது அந்த இடத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

Share this post with your friends