வேலூரில் 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. ஒரே நாளில் பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக கோட்டையின் அருகிலுள்ள மக்கான் பகுதியில் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திரத்திற்கு வித்திட்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் முன்னாள் ராணுவ வீரர்கள் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சிப்பாய் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலியை செலுத்தினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More