நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பிரதமர் பதவியை மோடி மீண்டும் பதவியை தக்கவைத்தார்.இந்நிலையில் 17-வது நாடாளுமன்ற மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்றும் ,இன்று தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . புதிதாக தேர்வான எம்.பி.க்கள் நேற்றும்,இன்றும் பதவியேற்க உள்ளனர்.
இதனையடுத்து , சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், எம்.பி.க்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க தற்காலிக சபாநாயகராக மத்தியப்பிரதேச பாஜக எம்.பி வீரேந்திர குமார் தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் நேற்று நடைபெற்ற தொடரில் ,பிரதமர் மோடியும் ,அமித் ஷாவும் மக்களவை தேர்தலில் உறுதி மொழி ஏற்று கொண்டார்கள் .வாரணாசி தொகுதி எம்.பி.யாக தற்காலிக சபாநாயகர் வீரேந்திர குமார் பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார் .பின்னர் ,பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்று கொண்டார் .
இன்று ,நடைபெற்ற மக்களவை தொடரில் புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் தமிழில் பதவிப்பிரமாணம் மேற்கொண்டார் .